ஈரலைப் பற்றிய தகவல்

உங்கள் உடலில் அதன் வலது பக்கத்தில் விலா எலும்புகளுக்குக் கீழே ஈரல் அமைந்து இருக்கிறது. உங்கள் உடலில் மிகப் பெரிய உள்ளுறுப்பாக இது அமைந்து உள்ளது.

ஈரல் எமக்கு மிகவும் முக்கியமான உறுப்பு, ஏனெனில் அது:

  • உடலினுள் புகும் இராசாயனப் பொருட்களையும் வேறு வஸ்துகளையும்  வடிகட்டுகிறது.
  • சமிபாட்டுக்கு உதவுகிறது.
  • உங்கள் இரத்தம் மற்றும் பல புரதங்கள் ஆகியவற்றின் உற்பத்திக்கு உதவுகிறது.

ஈரல் ஓர் உறுதியான உறுப்பாக இருப்பதுடன் சேதமடையும்போது அது வழமையாகத் தன்னைத் தானே குணமாக்கிக் கொள்கிறது. ஆயினும் வைரசுக்கள், மதுபானம், இரசாயனப் பொருட்கள், சில மருந்துகள் மற்றும் போதைவஸ்துகள் ஆகியன காலப்போக்கில் உங்கள் ஈரலை நிரந்தரமாகச் சேதப்படுத்த முடியும். அத்துடன் இவை ஈரலின் செயற்பாட்டுத் திறனையும் பாதிக்கின்றன.

உங்கள் ஈரலைப் பாதுகாப்பது முக்கியமானது. அது இல்லாமல் உங்களால் உயிர்வாழ முடியாது!