கனடாவிலும் உலகத்திலும் நிலவும் ஈரல் அழற்சி C பற்றிய புள்ளிவிபரங்கள்

 • உலகம் முழுவதிலும் ஈரல் அழற்சி C கிருமியினால் பீடிக்கப்பட்டவர்கள் 170 மில்லியன் பேர் உள்ளனர் என்ற மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
   
 • இந்திய நாட்டுக் குடிமக்களில் 1.8% அளவினர் (ஏறக்குறைய 21 மில்லியன் பேர்) ஈரல் அழற்சி C யுடன் வாழ்கின்றனர்.
 • பாகிஸ்தான் நாட்டுக் குடிமக்களில் 6% அளவினர் (ஏறக்குறைய 10 மில்லியன் பேர்) ஈரல் அழற்சி C யுடன் வாழ்கின்றனர்.

 • பிலிப்பைன்ஸ் நாட்டுக் குடிமக்களில் 3.6% அளவினர் (ஏறக்குறைய 3 மில்லியன் பேர்) ஈரல் அழற்சி C யுடன் வாழ்கின்றனர்.
   
 • கனடாவில், 250,000 பேர் ஈரல் அழற்சி C யுடன் வாழ;கின்றனர். இது குடிசனத்தொகையில் 0.8% அளவினர் ஆகும். இவர்களில் 110,000 பேர் ஒன்ராறியோவில் வாழ்கின்றனர்.
   
 • கனடாவில் நிலவும்  ஈரல் அழற்சி C தொற்றுக்களில் 20% ஆனவை புதிய குடிவரவாளர்கள் மத்தியில் காணப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
   
 • கடந்த வருடம் 280,000 எண்ணிக்கையிலும் அதிகமானோர் புதிய நிரந்தர வதிவாளர்களாகக் கனடாவில் குடியேறியுள்ளனர். அத்துடன் கல்வி அல்லது தொழில் தொடர்பாக  980,000 எண்ணிக்கையிலும் அதிகமானோர் இங்கு தற்காலிக வதிவாளர்களாக வந்துள்ளனர்.
   
 • சீனா நாட்டுக் குடிமக்களில் 3% அளவினர் (ஏறக்குறைய 40 மில்லியன் பேர்) ஈரல் அழற்சி ஊயுடன் வாழ்கின்றனர் என்று மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
   
 • ஒவ்வொரு வருடமும் ஒன்ராறியோவில் உள்ள மக்களில் சராசரியாக 3,500 பேர் ஈரல் அழற்சி C கிருமிகள் உள்ளவர்களெனப் பரிசோதனை  மூலம் கண்டறியப்படுகின்றனர்.
   
 • கனடாவில்  ஈரல் அழற்சி C தொற்று உடையவர்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பேர் அது தமக்கு இருப்பதை அறியாதவர்களாக உள்ளனர்.