உங்கள் மொழியிலே ஈரலழற்சி C பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளுங்கள்

இது ஈரல் அழற்சி C (Hepatitis C) என்ற  நோய்பற்றிய 
தகவலைப் பல மொழிகளில் தரும் ஒரு இணையத்தளம். ஆங்கிலத்தில் தகவலைப் பெறுவதற்கு தொடர்ந்து தளத்தினுள் செல்லுங்கள்.  இதற்கு இடது பக்கத்தில் உள்ள தேடலோட்டப் பட்டையினை (navigation bar) பயன் படுத்துங்கள் அல்லது இங்கே (click) அழுத்துங்கள்.

இணையத்தளத்தில் உள்ள எல்லா மொழிகளையும் பார்வையிட விரும்பினால் நீங்கள் மொழிப் பொதிகளை (language packs) அல்லது யூனிக்கோட் எழுத்துரு  ஆதார வசதியை நிறுவுதல் வேண்டும். இவையிரண்டுக்கும் உரிய அறுவுறுத்தல்களை இங்கே காணலாம். உங்கள் மேலோடி (browser) வழியாக இம் மொழிகளுக்கு ஆதரவு வழங்கப்படவில்லை என்றால் வெற்றிடப் பெட்டிகள் கட்டம் கட்டமாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.

This is a multilingual website for information about Hepatitis C.  For information in Tamil continue into the site by using the navigation bar to the left.  You can switch languages at any time using the language bar on the right.

To view all of the languages on the website you may need to install language packs or support for unicode fonts.  Instructions for both can be found here.

ரொறொன்ரோ பொது சுகாதார (Toronto Public Health) அமைப்பில் உள்ள தகவல் தொலைபேசி இணைப்பு

இது மாகாணம் அடங்கிலும் சேவை வழங்கும் ஓர் அமைப்பாக உள்ளது. இங்குள்ள ஆலோசகர்கள் ஹிந்தி, பஞ்சாபி, உருது, ராகலொக், மான்டரின், கன்ரொனீஸ், மற்றும் இன்னும் பல மொழிகள் பேசுகின்றனர். இந்த அமைப்பினை நீங்கள் தொலைபேசியில் அழைக்கும் பொழுது நீங்கள் விரும்பும் ஒரு மொழியில் ஓர் ஆலோசகருடன் பேசுவதற்கு குறிப்பிட்ட ஒரு நேரம் உங்களுக்குத் தரப்படலாம்.

இவர்கள் ஈரல் அழற்சி, ஏச்ஐவி மற்றும் பாலியல் ஆரோக்கியம் பற்றி இலவசமாக அநாமதேய முறையில் ஆலோசனை வழங்குவர். நீங்கள் பரிசோதனை செய்துகொள்வதற்காக இவர்கள் உங்களை ஒன்ராறியோவில் உள்ள ஒரு சிகிச்சை நிலையத்துடன் தொடர்புபடுத்தி விடவும் முடியும்.

ஒன்ராறியோவில் கட்டணம் இன்றி இந்த தொலைபேசி எண்ணில் அழையுங்கள்:

1-800-668-2437

திங்கள் - வெள்ளி: காலை 10:00 - இரவு 10:30

சனி மற்றும் ஞாயிறு : காலை 11:00 - பிற்பகல் 3:00

ஒன்ராறியோவிற்கு வெளியே உங்கள் உள்ளூர் குடியமர்வு நிறுவனத்துடன் அல்லது சுகாதார பராமரிப்பு வழங்குநருடன் தொடர்பு கொள்ளுங்கள்.