ஈரல் அழற்சி C பற்றி யாருடனாவது கலந்துரையாடுங்கள்

ரொறொன்ரோ பொது சுகாதார (Toronto Public Health) அமைப்பில் உள்ள தகவல் தொலைபேசி இணைப்பு

இது மாகாணம் அடங்கிலும் சேவை வழங்கும் ஓர் அமைப்பாக உள்ளது. இங்குள்ள ஆலோசகர்கள் ஹிந்தி, பஞ்சாபி, உருது, ராகலொக், மான்டரின், கன்ரொனீஸ், மற்றும் இன்னும் பல மொழிகள் பேசுகின்றனர். இந்த அமைப்பினை நீங்கள் தொலைபேசியில் அழைக்கும் பொழுது நீங்கள் விரும்பும் ஒரு மொழியில் ஓர் ஆலோசகருடன் பேசுவதற்கு குறிப்பிட்ட ஒரு நேரம் உங்களுக்குத் தரப்படலாம்.

இவர்கள் ஈரல் அழற்சி, ஏச்ஐவி மற்றும் பாலியல் ஆரோக்கியம் பற்றி இலவசமாக அநாமதேய முறையில் ஆலோசனை வழங்குவர். நீங்கள் பரிசோதனை செய்துகொள்வதற்காக இவர்கள் உங்களை ஒன்ராறியோவில் உள்ள ஒரு சிகிச்சை நிலையத்துடன் தொடர்புபடுத்தி விடவும் முடியும்.

ஒன்ராறியோவில் கட்டணம் இன்றி இந்த தொலைபேசி எண்ணில் அழையுங்கள்:

1-800-668-2437

திங்கள் - வெள்ளி: காலை 10:00 - இரவு 10:30

சனி மற்றும் ஞாயிறு : காலை 11:00 - பிற்பகல் 3:00

ஒன்ராறியோவிற்கு வெளியே உங்கள் உள்ளூர் குடியமர்வு நிறுவனத்துடன் அல்லது சுகாதார பராமரிப்பு வழங்குநருடன் தொடர்பு கொள்ளுங்கள்.