ஈரல் அழற்சி C என்றால் என்ன?

ஈரல் அழற்சி C என்பது  ஈரல் அழற்சி C வகை வைரசுக் கிருமியினால் உண்டாகும் ஒரு ஈரல் நோயகும்.

The Hepatitis C Virus

ஈரலைப் பாதிக்கிற ஈரல் அழற்சி வைரசுக்களில் வெவ்வேறு வகைகள் உள்ளன: அவை ஈரல் அழற்சி A, B மற்றும் C எனப்படுகின்றன. இந்த இணையத்தளம் ஈரல் அழற்சி C வகை பற்றியதாகும்.

ஈரல் அழற்சி C வகை வைரசுக் கிருமியைக் கொண்டிருக்கும் ஒருவரின் இரத்தம் உங்கள் குருதியோட்டத்தில் சேர்ந்து கொள்ளும்பொழுது உங்களுக்கு ஈரல் அழற்சி C நோய் உண்டாகலாம். நீங்கள் ஆரோக்கியமாக வாழத் தேவைப்படும் உடல் உறுப்பாக உள்ள ஈரலில் இந்த வைரசுக்கிருமிகள் தொற்றிச் சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஈரல் அழற்சி C நோய்க்குத் தடுப்பு மருந்து எதுவும் இல்லை. இந்த வைரசின்  தொற்று ஏற்பட்டவர்களிற் சிலர் தொற்று ஏற்பட்ட முதல் ஆறு மாதங்களுக்குள்  தாமாகவே அக் கிருமியை வெளியேற்றித் தப்பிவிடுகின்றனர். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு நீண்டகாலம் தொடரும் நாட்பட்டதொற்று நோய் உண்டாகி விடுகிறது.

ஆனால் இந்த வைரசை உடலில் இருந்து அகற்றுவதற்கான சிகிச்சை முறை இருக்கிறது.  வைரசு உடலிலிருந்து அகற்றப்பட்டதும் அதனை நீங்கள் மற்றவர்களுக்குக் கடத்த முடியாது. ஆனாலும் ஈரல் அழற்சி C வைரசு மீண்டும் உங்களுக்குத் தொற்றலாம்.